மல்லிகையால் மனம் குளிர்ந்த விவசாயிகள்.! ஆயிரத்தை தாண்டிய விலை.!!

1 August 2020, 5:01 pm
Sathy Jasmine Rate - Updatenews360
Quick Share

ஈரோடு : ஆடிப்பெருக்கை முன்னிட்டு சத்தியமங்கலம் பூமார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த சில தினங்களாக மல்லிகைப்பூ கிலோ 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் நாளை ஆடிப்பெருக்கு முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூவின் விலை கிலோ 1015 ரூபாயாக அதிகரித்துள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தில் பூக்களின் இன்றைய விலை நிலவரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக மல்லிகை ரூ.420 முதல் ரூ.1015 முல்லை ரூ.320 முதல் ரூ.360. காக்கடா ரூ.330 முதல் ரூ.380. பட்டு ரூ.42 முதல் ரூ.185. செண்டுமல்லி ரூ.26 முதல் ரூ.75. கனகாம்பரம் ரூ.350 முதல் ரூ.550. சம்பங்கி ரூ.80 வரை விலை போனது. மல்லிகை பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.