பாஜக குறித்து அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் பேச்சு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் பலதலைமுறையினர் வணங்கபட்டுவந்த ஆஞ்சநேயருக்கு திருக்கோவிலில் புதிய கோவில் கட்டுமானப் பணி துவக்க நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பொன். இராதாகிருஷ்ணன் கூறுகையில், அரசியல் கட்சியில் தேர்தலில் போட்டியிட வேண்டும். மாற்று கருத்து இல்லை. காலசூழலுக்கேற்ப தான் போட்டியிட வேண்டும். திமுகவும், அதிமுகவும் பல இடைதேர்தல்களில் போட்டியிடவில்லை. ஈரோடு இடைதேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க மாநில தலைவர் அண்ணாமலைக்கு முழு
அதிகாரம் வழங்கபட்டுள்ளது, என தெரிவித்தார்.
பாஜக பல்வேறு மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சிகளை அழித்த வரலாறு நாட்டுக்கும் எங்களுக்கும் தெரியும் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- ஏற்கனவே பொன்னையன் இது போன்ற கருத்துகளை கூறுய பொழுது, இது கட்சியினுடைய கருத்தல்ல என அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளது என்பனைநினைவு கூறுகிறேன்.
ஈரோடு தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெல்வார் என்று கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இதுவரை 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
யாராவது தோல்வி அடைவேன் என கூறுவார்களா..? ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று கூறுவதுண்டு. பாஜகவிற்கு ஊர் ஒன்றுபட்டால் தான் கொண்டாட்டம் என்பதை உணர்ந்து தான் பாஜக, அதிமுகவை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதிமுகவை பாஜக பிளவுபடுத்த முயல்வதாக கூறபடுவதை பொறுத்தவரையில், திமுகவிலிருந்து அதிமுக உருவாவதற்கு பாஜகவா காரணம்.? பழைய சரித்திரத்தை கூறினால் திமுகவினர் அசிங்கப்பட்டு போவார்கள், என கூறினார்
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.