தனது கையை தானே வெட்டிய முன்னாள் ராணுவ வீரர்!!

28 August 2020, 4:48 pm
Hand Cut -Updatenews360
Quick Share

தேனி : கம்பம் அருகே குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் தன் கையை தானே வெட்டிய சம்பவம் உறைய வைத்துள்ளது.

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் மனோகரன் .இவருடைய மகன் பெயர் வெங்கடேசன் இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் குடும்பத்தகராறு காரணமாக மணைவி பிரிந்து சென்றதால் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது .

இந்நிலையில் கம்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள கோழிக் கடைக்கு வெளியே வெங்கடேசன், இரண்டு சக்கர வாகனத்தினை நிறுத்திவிட்டு கோழிக் கடைக்கு சென்ற வெங்கடேசன் உள்ளே நுழைந்து கோழிக்கறி வெட்டும் கத்தியினை எடுத்து தனது கையினை தனே வெட்டிக் கொண்டார்.

மேலும் அந்த கடையில் ஒரு சிலர் தவிர வெளிநபர்கள் யாரும் கூட்டம் இல்லாமல் இருந்தனர். மேலும் தனது மற்றொரு கையினை வெட்டுமாறு கடை ஊழியரிடம் வெங்கடேசன் கூறி வந்துள்ளார். உடனடியாக இதை அறிந்த ஊழியர்கள் கம்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் வெங்கடேசன் தனது கை துண்டானது தொடர்ந்து வெட்டிய கையினை விட்டுவிட்டு தனது இரண்டு சக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் உடனடியாக வந்து வெங்கடேசனை முதல் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் வெங்கடேசனின் கையையும் ஐஸ் கட்டிகளை வைத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். தனது கையினை தானே வெட்டிக்கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரரின் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மட்டுமில்லாமல் காவல்துறையினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது

Views: - 32

0

0