தனிப்படை போலீசாரை வெட்ட முயன்றதால் பரபரப்பு : தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்ய முயன்ற போது நிகழ்வு!!

Author: kavin kumar
11 February 2022, 6:27 pm
Quick Share

சென்னை : தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்ய முயன்ற தனிப்படை போலீசாரை கத்தியால் வெட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த நடராஜன் (எ) பாம்கை நடராஜன் (24) என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு நிதிமன்றம் பிடி ஆணை வழங்கியது. இதையடுத்து சென்னை பெரும்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று சென்னையில் அவர் பதுங்கியிருக்கும் பகுதி குறித்து போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரை பிடிக்கச் சென்ற தனிப்படை போலீசாரை கண்டதும் கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்கு என 26 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 476

0

0