“எங்கள் கவலைகளின் தடுப்பூசியே“ : நடிகர் விஜய்காக ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!!

20 June 2021, 6:43 pm
Vijay poster - Updatenews360
Quick Share

மதுரை : எங்கள் கவலைகளின் தடுப்பூசியே என தடுப்பூசி மருந்தில் நடிகர் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்ற போஸ்டர் மதுரையில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி வருவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

அதில் பல போஸ்டர்கள் சுவாரஸ்யமான அடைமொழிகளுடன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும், நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைப்பது போல் உள்ளதால் பேசு பொருளாகி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு தனது பிறந்தநாளுக்கு கொண்டாட்டங்கள், பேனர் போஸ்டர் பேப்பர் விளம்பரங்கள் வேண்டாம் என்று விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டாலும், மதுரையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது ரசிகர்கள் பெரியார் நிலையம், கோரிப்பாளையம், தல்லாகுளம் பகுதிகளில் போஸ்டர்களை அதிகளவில் ஒட்டியுள்ளனர்.

அதில் தமிழகத்தில் இனி எப்போதும் தேவையில்லை டாஸ்மாக், அரசியலில் நீங்கள் வந்தால் மக்கள் தருவார்கள் பாஸ்மார்க் எனறும், எங்கள் கவலைகளின் தடுப்பூசியே, என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

மருந்து குப்பியில் விஜய்யின் புகைப்படம் இடம்பெற போஸ்டர் ஓட்டப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Views: - 181

0

0