அண்ணன் வரார் வழி விடு… தவெக மாநாடு வெற்றி பெற கிடா வெட்டி பூஜை செய்த நிர்வாகிகள்..!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2024, 6:16 pm

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என கிடா வெட்டி விருந்து வைத்து சிறப்பு பூஜை செய்த நிர்வாகிகள்

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கட்சி தொடங்கி முதல் அரசியல் மாநாடு வருகிற 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெறவுள்ளது

இந்த மாநாடுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தேனியில் மாநாடு வெற்றி பெற வேண்டி த.வெ.க நிர்வாகிகள் கிடா வெட்டி விருந்து வைத்து பொதுமக்களுக்கு உணவுகளை பரிமாறினார்

முன்னதாக தேனி அன்னஞ்சி அருகே உள்ள ஈஸ்வரன் கோயிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர் அணி பொறுப்பாளர் பிராகாஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியுடன் மாநாடு எந்த தடையும் இன்றி வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம் செய்தனர் பின்னர் ஆடு, கோழி வெட்டி சமைத்து கிடா வெட்டி விருந்து வைத்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து உணவு அளித்தனர்

பின்னர் இதுகுறித்து தெரிவித்த த.வெ.க தேனி மாவட்ட பொறுப்பாளர் பிரகாஷ் கூறும்போது மாநாடு வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு கிடா விருந்து பரிமாறி வருகிறோம் என்றும் தவெக தலைவர் விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது தேனி மாவட்டத்தில் இருந்து 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்

  • Jana Nayagan Release Postponed to Next Year Due to Vijay Politics ஜனநாயகன் படத்துக்கு பிரச்சனையா? விஜய் அரசியலால் புது சிக்கல்!