வார இறுதி நாட்களில் கூடுதல் விரைவு பேருந்துகள் இயக்கம் : அரசு விரைவு போக்குவரத்து கழகம்..!

11 September 2020, 5:38 pm
Quick Share

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கத் அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக்கத்தின் சார்பில் வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் இடையே, நாள் தோறும் 313 விரைவு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மற்ற நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்ய 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பயணம் செய்ய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்கின்றனர்.

இதனால் வழக்கத்தை விட 75 கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பயணிகள், WWW.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தால் கூடுதல் பேருந்துகள் இயக்க வசதியாக இருக்கும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Views: - 0

0

0