சராசரிக்கு அதிகமாகவே பெய்த தென்மேற்கு பருவமழை ; நீலகிரி, கிருஷ்ணகிரி 150% மழை ; கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்!!

Author: Babu Lakshmanan
7 September 2022, 7:41 pm
Quick Share

கோவை : தென்மேற்கு பருவமழையை பொருத்தவரை சராசரிக்கு அதிகமாகவே மழை பொழிந்துள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கிதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

கோவை வேளாண் பல்கலைகழகத்தில் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தென்மேற்கு பருவமழை குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- தென்மேற்கு பருவ மழை, ஜூன் 1ல் துவங்கி தற்போது வரை நல்ல மழை பொழிந்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் 190% மழை பொழிவு உள்ளதென கூறிய அவர் இம்முறை 90% அதிகமழை பொழிந்துள்ளதாக தெரிவித்தார்.

அதே சமயம் செங்கல்பட்டு, கள்ளகுறிச்சி, கன்னியாகுமரியில் போதுமான மழை இல்லை என கூறினார். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி 150% மழை பெய்துள்ளதாகவும், 50% மழை அதிகமாக பொழிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மேட்டூரில் இருந்து 20 நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

வேளாண் மண்டலங்கள் 7 ஆக பிரித்துள்ளதாகவும் தெரிவித்தார். தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் முக்கிய மாவட்டங்கள் எனவும் திருவாரூரில் 110% அதிக மழை பெய்துள்ளதாகவும் 200 மிமீ க்கு 422 மிமீ மழை பெய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், விவசாயத்திற்காக உடனடியாக வடிகால் வசதி செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார். தென் மாவட்டங்களை பொருத்தவரை புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வடிகால் புதுவசதியை உடனடியாக செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார். மதுரையில் பெரியார் வைகையில் குருவை நெல் நடவு செய்தவர்கள் அந்த நெற்பயிர்களை பாதுகாக்க வடிகால் வசதி செய்து வைத்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

இங்கு 80% வரை அதிக மழை பெய்து உள்ளதாகவும் இம்முறை 444 மிமீ வரை மழை பெய்துள்ளது எனவும் தெரிவித்தார். வடகிழக்கிலும் நல்ல மழை பொழிவு உள்ளதாக கூறிய அவர், 419 மிமீ மழை பொழிவு இருந்துள்ளதாக தெரிவித்தார்.

காய்கறி பயிர்கள் இருக்கும் இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவை உட்பட மேற்கு மாவட்டங்களில் ஓரளவு மழைதான் பெய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், பிரச்சனைகள் இல்லை எனவும் கூறினார். மேலும், நீலகிரியில் அதிக மழை பெய்துள்ளதாக தெரிவித்த அவர், 1700 மிமீ மழை பெய்துள்ளதாகவும், அங்கு மண் அரிப்பை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், எனவும் தெரிவித்தார்.

இந்த மழையினால் நிலத்தடி நீர் ஓரளவு மேலே வந்துள்ளது எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல மழை காலமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நீர்பாசனம் அதிகம் உள்ள இடங்களில் வடிகால் வசதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தக்காளியை உள்ளிட்ட காய்கறி பயிர்களை பொறுத்தவரை, அதிகமழை இருந்தாலும் மழை இல்லாவிட்டாலும் பிரச்சினை வரும் எனவும், தக்காளி போன்ற செடிகள் மழை அதிகமாக வரும்போது செடியின் பாரம் தாளாமல் மண் மீது விழுந்து தக்காளி அழுகிவிடும் என தெரிவித்தார்.

இதனால், மழைக்காலங்களில் தக்காளியின் விலை அதிகரிக்கும் என தெரிவித்தார். இதன் காரணமாக நாம் புரோட்டெக்டட் கல்டிவேசன் முறையில் தக்காளியை வளர்ப்பதாகவும் இதனால் தக்காளி கீழே விழாமலும் அழுகாமலும் இருக்கும் என தெரிவித்தார்.

செங்கல் சூளை பகுதிகள் மூடபட்ட இடத்தில் விவசாயம் செய்து இயலுமா என்ற கேள்விக்கு, மேல் உள்ள மண் தான் வளமான மண் எனவும், அதனை எடுத்து செங்கல் செய்து விட்டதால் கீழே உள்ள மண் வளமாக இருக்காது எனவும், எனவே தமிழக அரசு “waste land development” திட்டங்கள் மூலம் அங்கு மரங்கள் நட முயற்சி எடுத்து வருவதாகவும், குழுக்கள் அமைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

நிலத்தடி நீர்மட்ட கணக்கெடுப்பை பொறுத்தவரை துல்லியமாக கணக்கெடுக்கும் அளவிற்கு நீரின் மட்டம் உயரவில்லை எனவும், ஆனால் நிலத்தடி நீர் உயர்ந்துதான் உள்ளதாகவும் தெரிவித்தார். வெங்காயத்தை பொறுத்தவரை, டெமிக் என்ற முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்து கூறுவார்கள் எனவும், இது தங்களது இணையதளத்திலும் உழவன் செயலிலும் உள்ளதாகவும், மக்கள் அதனை பார்த்தால் எப்போது எந்த பயிர்களை விளைவிக்கலாம் என அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

தங்களிடமும் மழைப்பொழிவை துல்லியமாக கணக்கிடுவதற்கு தொழில்நுட்ப வசதிகள் உள்ளதாகவும், தங்களில் 285 தானியங்கி வானிலை மையங்கள் இருக்கின்ற நிலையில் 240 மையங்கள் இயங்கி வருவதாகவும், மீதமுள்ளவை கூடிய விரைவில் இயங்கும் எனவும் தெரிவித்தார். தற்போது 80% சரியாக கணித்து வருவதாக கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை காற்றின் திசை மாறுபாடு காரணமாகவே இம்முறை குறைந்த அளவு மழைப்பொழிவு இருந்ததாக தெரிவித்தார். 23 நாட்களுக்குள் அது சராசரி நிலையை எட்டிவிடும் எனவும் தெரிவித்தார். மேலும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் வடிகால் வசதியை செய்து வைத்து கொள்ள வேண்டும் என கூறினார்.

மேலும், வேளாண் பல்கலைக்கழகத்தில் 13 பட்டப் படிப்புகளுக்கு 10ம் தேதி அன்று ரேங்க் லிஸ்ட் வெளியிட முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தார். மேலும், டிப்ளமோ போன்ற பட்டய படிப்புகளை பொறுத்தவரை தமிழக அரசு 3 இடங்களில் தோட்டகலை டிப்ளமோ படிப்பை தந்து வருவதாகவும், உறுப்பு கல்லூரிகளை பொறுத்தவரை 8 இடங்களில் தந்து வருவதாகவும் இணைய தள வாயிலாக அப்ளே செய்ய கேட்டு கொள்ளவதாகவும் தெரிவித்தார்.

பட்டயபடிப்புகளில் மொத்தம் அக்ரி கல்சரில் 760 இடங்கள், ஹார்ட்டி கல்சரில் 400 இடங்கள், என்ஜினியரிங் இல் 40 இடங்கள், தமிழ் வழியில் 80 இடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்த அவர், 35 நாட்கள் வரை அப்ளே செய்யலாம் என தெரிவித்தார். மேலும் தமிழக அரசு சொல்வதை அப்படியே கடைபிடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கை பொருளாதார சரிவை சரிசெய்ய ஆலோசனைகள் (technical inputs) மட்டும் வழங்கி உள்ளதாகவும், குழுக்கள் எதுவும் செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

Views: - 389

0

0