மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள் : குறைதீர்ப்பு முகாமில் விவசாயிகள் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2022, 2:00 pm
Farmers Complaint 1 -Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது : கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூர், பதுவம்பள்ளி, மாதப்பூர் முத்து கவுண்டன்புதூர் போன்ற கிராம பஞ்சாயத்துக்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிமை பெறாமல் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இதனால் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மாசடைவது உடன், காற்று மாசுபடுகிறது. உடனடியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளிபாளையம், சிறுமுகை – அன்னூர் செல்லும் பாதையில் அனுமதியற்ற முறையில் கனிமவளத் துறை மூலம் முறையான அனுமதி பெறாமல் கனிம வளங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு மிக முக்கியமான நீர் ஆதாரமாக நொய்யல் ஆறு உள்ளது. இந்த ஆற்றை அளவீடு செய்து முட்புதர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

கருவேப்பிலை குறித்து வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கோவை மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவிற்கு மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் கருவேப்பிலை விவசாயம் செய்து வருகின்றனர். எனவே கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 743

0

0