தம்பி… கவனம் தேவை.. கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : பிடிஆருக்கு ஜெயக்குமார் அட்வைஸ் !!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 5:58 pm
Jayakumar Warn PTR - Updatenews360
Quick Share

சென்னை : ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பங்கேற்காதது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா என பிடிஆருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற 45ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காமல் போனது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேசிய நிதியமைச்சர், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக வேண்டியிருந்ததால் பங்கேற்கவில்லை என விளக்கம் அளித்திருந்தார். இதனால் பிடிஆர் காரணம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கடும் விமர்சனத்தை முன் வைத்தனர்.

மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், ”தமிழக மக்களின் உரிமைகளை நிலை நாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காகதது வருத்தம், அதற்காக சொல்லபடுகிற காரணமும் ஏற்று கொள்ளத்தக்கதல்ல.

பொதுமக்கள் – வணிகர்கள் சூஆகியோர்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30க்கும் மேற்ட்ட ஜிஎஸ்டி கூட்டங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். ஒரு முறை கூட கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்தது இல்லை.

நிதியமைச்சர் தனது கடமையை செய்யாமல்இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? தம்பி பிடிஆர் கவனத்தில் கொள்!” என அறிவுரைகளையும் தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

Views: - 184

0

0