கழிப்பிட கட்டிடம் திறந்ததாக கணக்கு காட்டிய நகராட்சி : தண்ணீரே இல்லாமல் கழிவறையா? ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2022, 1:14 pm
Villupuram Bathroom - Updatenews360
Quick Share

விழுப்புரம் : மத்திய அரசு திட்டத்தின் கீழ் சமூக கழிப்பறை கட்டிடத்தை தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் திறக்கப்படாத கட்டிடத்தை திறந்ததாக கூறி கணக்கு காட்டிய நகராட்சி நிர்வாகம். ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

மத்திய அரசின் (ODF Plus)ஓ டி எப் பிளஸ் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் ஒரு சமூக கழிப்பறை கட்டுவதற்காக மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

விழுப்புரத்தில் நகராட்சி உட்பட்ட கார்குப்பம் கீழ்பெரும்பாக்கம் சாலையில் சமூக கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் அந்த கழிப்பறை கட்டிடத்திற்கு போர் போடவில்லை, தண்ணீர் தொட்டியும் அமைக்கவில்லை.

மேலும் ஒரு சில அறையில் அமர்ந்து போகும் கழிவறை பீங்கான் கூட பொருத்தாமல் சென்ற அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டு சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி கழிவறை கட்டியதாக அப்போது இருந்த நகராட்சி ஆணையர் வெளியில் மட்டும் வர்ணம் பூசி படம் எடுத்து திறக்கப்பட்டது என மத்திய அரசுக்கு கணக்கு காட்டி உள்ளார்.

இதனை சமூக வலைதளங்களில் இந்த கழிவறை நிலையைப் பற்றி வெளியானது. இதனை அடுத்து அங்கு ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தண்ணீர் கூட இல்லாமல் எப்படி கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்துவார்கள் என்ற கேள்வியை கேட்டார்.

உடனே துப்புரவு மேற்பார்வையாளர் இந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் பொருத்தாததால் தண்ணீர் வரவில்லை அதேபோல மின்விளக்குகள் இல்லாததால் ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் இந்த கழிப்பறை இருப்பதாலும் பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவது கிடையாது என்று குற்றம் சாட்டினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கோபத்துடன் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளிக்காமல் நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் என்று கூறிவிட்டு உடனடியாக அந்த வார்டு கவுன்சிலர் மேற்பார்வையில் எஞ்சியுள்ள அனைத்து படிகளையும் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதே போல எருமனந்தாங்கல், கா குப்பம் கிராமம் ராகவன் பேட்டை ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

Views: - 276

0

0