போலி ரசீது தயாரித்து கையாடல்.! சர்வோதயா மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்

19 April 2021, 8:40 pm
Arrest_UpdateNews360
Quick Share

கன்னியாகுமரி : போலி ரசீது தயாரித்து கையாடல் செய்த சர்வோதயா சங்க மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மருதங்கோடு மடத்துவிளையை சேர்ந்தவர் ராமேஸ்வரன் (68 ) இவர் கண்ணம்மா மூடு சர்வோதய சங்கக் கிளை மேலாளராக கடந்த 2000ம் ஆண்டு முதல் 2003 வரை பணியாற்றி வந்தார். அப்பொழுது திருவிழா காலங்களில் பொதுமக்களுக்கு காதி பொருட்களில் 30% தள்ளுபடி செய்ததை போலி ரசீது கொடுத்து சுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 209 ரூபாய் கையாடல் செய்ததாக நாகர்கோவில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நாகர்கோவில் ஜே.எம் 1 கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கையாடல் செய்த ராமேஸ்வரனுக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனையும் 17 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கிறிஸ்டியன் தீர்ப்பளித்தார்.

Views: - 117

0

0