ஹோமியோபதியா, அலோபதியா? பாவம் அவரே Confuse ஆயிட்டாரு : போலி மருத்துவரான முதியவர்..கையும் களவுமாக கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 3:38 pm
Fake Doctor Arrest -Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் ராஜ வீதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 77). இவர் தனது வீட்டில் ஹோமியோபதி மருத்துவமனை என்ற பெயரில் அலோபதி மருத்துவம் பார்ப்பதாக தாராபுரம் அரசு தலைமை மருத்துவர் சிவபாலன்னுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தலைமை மருத்துவர் சிவபாலன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொளத்துப்பாளையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஹோமியோபதி மருத்துவர்.ஜெயராஜ் அலோபதி மருந்துகளை பயன்படுத்தி மருத்துவம் பார்த்ததை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. மருத்துவர் சிவபாலன் கொடுத்த புகாரின்பேரில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு, ஆய்வாளர் மணிகண்டன், மற்றும் போலீசார் ஜெயராஜை கைது செய்து அவரிடமிருந்து அலோபதி மருந்துகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Views: - 969

0

1