ரூ.1500 கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இ-பாஸ்.! வலம் வந்த ஆடியோவால் ஆப்பு.!!

4 August 2020, 5:45 pm
FAke Epass - Updatenews360
Quick Share

வேலூர் : 1500 ரூபாய் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்ல பாஸ் கிடைக்கும் என்ற குறுஞ்செய்தி பரவிவருகிறது.

வேலூரில் சில வாட்ஸ்அப் குரூப்களில் 2 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஒப்புதலுடன் கூடிய இ பாஸ் வழங்கப்படும் என்று குறுஞ்செய்தி பரவியதை அடுத்து பலர் அவரிடம் சென்று பணத்தை கொடுத்து இ பாஸ் பெற்றுள்ளனர்.

இதேபோல் குறுஞ்செய்தியை முன்னாள் அரசு ஊழியர் இதயராஜ் என்பவருக்கு வந்துள்ளது அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு பாஸ் வேண்டும் என கேட்டுள்ளார் . அவர் அதற்கு 1500 ரூபாய் கூகுள் பே மூலம் அனுப்புங்கள் உடனடியாகக் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இடம் இது குறித்து புகார் மனு அளித்துள்ளார். அதில் இதுபோன்று பணம் வாங்கிக் கொண்டு போலியான இ பாஸ் வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட வேலூர் போலீசார் 1500 ரூபாய் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இ பாஸ் வழங்கப்படும் பதிவு செய்து விளம்பரம் செய்த பெரிய அல்லாபுரம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் குமார்(வயது 18) என்ற இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய திருப்பூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.