போலி மின்னஞ்சல் மற்றும் ட்விட்டர் கணக்கை நம்ப வேண்டாம்: ஆளுநர் மாளிகை எச்சரிக்கை

Author: Udhayakumar Raman
17 October 2021, 10:58 pm
Quick Share

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சில விஷமிகள், ஆளுநரின் பெயரில் போலியாக சில மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி, ஆட்சேபனைக்குரிய தகவல்களுடன் மின்னஞ்சல்களை அனுப்புவது குறித்து சமீபத்தில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியும், @rajbhavan_tn என்ற டுவிட்டர் கணக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமானவை. மற்ற போலி மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் போலி டுவிட்டர் கணக்குகளில் பரப்பப்படும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Views: - 150

0

0