‘ராம்ராஜ்‘ நிறுவனத்தின் பெயரில் போலி மாஸ்க் தயாரிப்பு : ஊழியர்களே கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்!!

Author: Udayachandran
9 October 2020, 6:52 pm
Ramraj FAke Mask - Updatenews360
Quick Share

திருப்பூர் : ராம்ராஜ் பெயரில் போலி மாஸ்க் தயாரித்த நபர்களை லாவகமாக பிடித்த ஊழியர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூரை தலைமையகமாக கொண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது கிளையை துவக்கி வேட்டி, சட்டை மற்றும் உள்ளாடைகள் தயாரிப்பு என மிகப்பெரிய அளவில் விற்பனை செய்துவரும் ராம்ராஜ் நிறுவனம் தற்போது முகககவசங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி முகநூல் பக்கத்தில் சீனு என்பவர் ராம்ராஜ் மாஸ்க் குறைந்த விலையில் கிடைக்கும் என விளம்பரம் பதிவிட்டதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நிறுவனர் நாகராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவரின் அறிவுறுத்தலின் பேரில் நூதனமாக இந்த கும்பலை பிடிக்க திட்டமிட்டு முகநூலில் பதிவிட்ட சீனு என்பவரை தொடர்பு கொண்டு அவர் மூலம் போலியாக தரமற்ற முறையில் மாஸ்க் தயாரிக்கும் நேர்மைநாதன் என்பவரை அணுகி உள்ளனர்.

நேர்மைநாதன்

அவர் தற்போது ஸ்டாக் இல்லை எனவும் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதால் சில நாட்களில் தயார் செய்து தருவதாக கூறி உள்ளார். இதனையடுத்து 30ம் தேதி அவரிடம் முகக்கவசங்களுக்கான ஆர்டர்களை கொடுத்து முன்பணமும் கொடுத்துள்ளனர். அதன்படி நேற்று முகக்கவசங்கள் தயாராகி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சீனு

இதனையடுத்து கே.வி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது குடோனுக்கு சென்று பார்த்த போது மாஸ்க்குகள் ராம்ராஜ் முத்திரையுடன் போலியாக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முருகன்

நேரில் சென்ற போலீசார் 1500 போலியாக தயாரிக்கப்பட்ட மாஸ்க்குகளை பறிமுதல் செய்து போலி தயாரிப்பில் ஈடுபட்ட நேர்மைநாதன், ராம்ராஜ் முத்திரையை வடிவமைத்து பிரிண்டிங் செய்த முருகன் மற்றும் முகநூலில் விளம்பரப்படுத்திய சீனு என மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Views: - 124

0

0