பொது மக்களிடம் மிரட்டி பணம் பறித்த போலி காவலர் கைது…

Author: Udhayakumar Raman
24 September 2021, 10:46 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி பகுதியில் போலீஸ் எனக் கூறி பொது மக்களை மிரட்டி பணம் பறித்துவந்த நபரை உண்மையான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் மருதிப்பட்டி பகுதியை சேர்ந்த தம்பிதுரை. பட்டதாரியான இவர் தான் ஒரு குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருவதாக கூறி தங்கும் விடுதி, உணவகங்களில் மிரட்டி பணம் பறிப்பதோடு இருசக்கர வாகனங்களில் வரும் பொது மக்களிடம் சாலையில் நின்று கொண்டு அடையாள அட்டை, தலைகவசம் அணியாமல் வருபவர்களை சோதனை என்ற பெயரில் மிரட்டி பணம் வசூல் செய்வது வாடிக்கை. இந்நிலையில் இன்று மாலை அரூரிலிருந்து தருமபுரி நகரை நோக்கி வரும் சாலையில் நின்றுக்கொண்டு அந்த வழியே இருசக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் மிரட்டி பணம் வசூல் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவரை வழிமறித்து சோதனையிட வேண்டும் என கூறியதையடுத்து,

அந்த காவலர் நீங்கள் யார் என்னை சோதனையிட என கேட்ட போது தான் காவலர் என்றும், நகர காவல் நிலையத்தில் பணிபுரிவதாகவும் கூறியதையடுத்து சந்தேகமடைந்த காவலர், இவர் போலியாக காவல் துறையில் பணிபுரிவதாக கூறி பொது மக்களிடம் மிரட்டி பணம் பரிப்பதை அறிந்து அங்கிருந்த பொது மக்கள் உதவியோடு அவரை பிடித்து நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போலி காவலர் என கூறிய தம்பிதுரையை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.பின்னர் தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Views: - 257

0

0