போதை மாத்திரைக்காக பிரபல மருத்துவமனை பெயரில் போலி மருந்துச்சீட்டு: 2 இளைஞர்கள் கைது…!!

Author: Aarthi Sivakumar
26 July 2021, 10:38 am
Quick Share

கோவை: போலி மருந்துச்சீட்டு மூலம் மாத்திரைகள் வாங்க முயற்சி இளைஞர்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மருந்தகத்தில் குறிப்பிட்ட மருத்துவமனையின் அடையாளம் பொறித்த மருந்துச்சீட்டு கொண்டு RANTAC மற்றும் NITROZUM ஆகிய மாத்திரைகள் வாங்க 2 இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது, இளைஞர்கள் மீது சந்தேகம் அடைந்த மருந்தக ஊழியர் சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு தொடர்புக்கொண்டு விசாரித்துள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்கள் எந்தவித மருந்துச்சீட்டு வழங்கவில்லை என தெரியவந்தது. சந்தேகத்திற்குரிய இளைஞர்கள் பெயரை தெரிவிக்காத நிலையில், மருந்துச்சீட்டு போலியானது என்பதை அறிந்த மருந்தக ஊழியர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக விரைந்து வந்த போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரித்ததில், மருந்துச்சீட்டு போலி என்பதும், வாங்க வந்தவர்கள் காந்திபார்க் பகுதியை சேர்ந்த முஹம்மது ரசூல், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.

இருவரும் பெரியக்கடை வீதி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். கடந்த சில மாதங்களாக மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதும், இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதும் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 204

0

0