அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த குடும்பம் : ஈரோடு அருகே நூதன போராட்டம்!!

20 October 2020, 1:20 pm
Erode Beggar - Updatenews360
Quick Share

ஈரோடு : அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்ச பணம் கொடுப்பதற்காக பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி. கூலி வேலை செய்து வரும் இவரது மருமகள் பிரியா கடந்த பிப்ரவரி மாதம் உடலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சொத்துக்களை உயிரிழந்த பிரியாவின் குழந்தைகள் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக ஜோதிமணி மாத்தூர் திராம நிர்வாக அலுவலரிடம் வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் செய்துள்ளார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொரோனா காலத்திற்கு பிறகும் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷம், தொடர்ந்து சான்றிதழ் கொடுக்க 3ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட ஜோதிமணி குடும்பத்தினருடன் லஞ்சம் கொடுப்பதற்காக பொதுமக்களிடம் யாசகம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூலி வேலைக்கு செல்வதால் பணம் கொடுக்க முடியவில்லை என்று கூறியும் அலுவலர் பணம் கேட்பதாக கூறினார். இதையடுத்து வட்டாட்சியரிடம் நடவடிக்கை எடுக்ககோரி ஜோதிமணி புகார் மனு கொடுத்தார். குடும்பத்தினர் திடீர் போராட்டத்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லஞ்சம் வாங்குவது குற்றம் என தெரிநிதும், கொரோனா காலத்தில் மக்கள் கையில் காசில்லாமல் அலைந்து திரியும் சூழ்நிலையிலும் மக்களிடம் ரத்த்தை உரிஞ்சுவது போல அரசு அதிகாரிகளின் போக்கு என்று தணியுமோ என மக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

Views: - 22

0

0