கணவர் இறந்ததால் குடும்பமே தற்கொலை : செல்லப்பிராணிக்கும் விஷம் வைத்த பரிதாபம்!!

30 November 2020, 12:06 pm
Family Suicide - Updatenews360
Quick Share

மதுரை : கணவர் இறந்ததால் மகள்களுடன் தாய் தற்கொலை செய்த நிலையில் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கும் விஷம் வைத்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஒத்தக்கடை அருகே மலைச்சாமிபுரம் பகுதியில் திருச்சியை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் தனது மனைவி வளர்மதி (வயது 38) , மகள்கள் அகிலா(வயது 20), ப்ரீத்தி(வயது 17) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் அருண் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அருண் இல்லாத நிலையில் குடும்பம் வறுமையில் இருந்துள்ளதோடு கணவரின் பிரிவை ஏற்கமுடியாத நிலையில் நேற்றிரவு வளர்மதி தனது பிள்ளைகளான அகிலா, ப்ரீத்தி ஆகியோருடன் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்.
மேலும் தாங்கள் செல்லமாக வளர்த்த நாயையும் பிரிந்து செல்ல மனமில்லாத நிலையில் நாய்க்கு விஷம் கொடுத்த நிலையில் நாயும் உயிரிழந்துள்ளது. தந்தை இல்லாமல் வாழ முடியவில்லை என்பதை பதிவிட்டு தங்களது தற்கொலைக்கான காரணம் குறித்த முழு விவரங்களையும் கடிதமாக எழுதிவைத்துள்ளனர்.

தந்தை உயிரிழந்த சோகத்தில் மனைவி மகள்கள் என குடும்பத்தினரே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குபதிவு விசாரணை நடத்திவருகின்றனர்.

Views: - 20

0

0