கடமை தவறிய பிரபலங்கள்..! வாக்களிக்க வராதவர்கள் இத்தனை பேரா..?

Author: Rajesh
19 February 2022, 7:37 pm
Quick Share

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. அரசியல் தலைவர் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செலுத்தினர்.

சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் வாக்களித்தார். அதே போல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியிலும் வாக்களித்தார். நடிகர் இளைய தளபதி விஜய் காலையிலேயே வந்து நீலாங்கரையிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்து சென்றார்.

அதேபோல, சசிகலா, டி.டி.வி.தினகரன், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய மனைவி கிருத்திகா உள்ளிட்டோரும் தங்களது கடமையை செலுத்தினர். சூர்யாவும், கார்த்தியும் வாக்குப் பதிவு நிறைவடையும் தருவாயில்வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

தமிழ்நாட்டில் இந்த முறை எதிர்பார்த்ததைவிட குறைவான அளவே வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் பிரபலங்கள் பலரும் வாக்களிக்காமல் தவறவிட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக அனைத்து தேர்தல்களிலும் நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் வந்து காலை 7 மணி அளவிலேயே வந்து முதல் ஆளாக அவரது வாக்கைப் பதிவு செய்வார். ஆனால், இந்த முறை அவர் வாக்குப் பதிவு செய்யவில்லை. அதேபோல, ரஜினிகாந்த்தும் வாக்குப் பதிவு செய்ய வரவில்லை.

Rajini - Updatenews360

மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சிம்பு, த்ரிஷா, தனுஷ், வடிவேலு உள்ளிட்டவர்களும் வாக்குப் பதிவு செய்யவில்லை என்பது ஆச்சிரியப்பட வைத்துள்ளது.

Views: - 905

0

1