இந்த உச்சகட்ட இன்பத்தை அனுபவியுங்கள் : ஆணுறை விளம்பர படத்தில் சிம்பு பட நடிகை..!

Author: Rajesh
12 April 2022, 6:07 pm
Quick Share

தமிழில் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் தான் நிதி அகர்வால். இதையடுத்து அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் சில நிறுவனங்களை விளம்பரம் செய்து பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். தற்போது இவர் அவ்வாறாக செய்துள்ள ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஒரு தனியார் நிறுவனத்தின் காண்டம் விளம்பரத்தை பகிர்ந்ததுடன் தனியாக அதனை விளம்பரப்படுத்தி போஸ்ட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். தனியார் நிறுவனத்தின் பிரமோஷனுக்காக காசு வாங்கி அவர் இதனை செய்திருந்தாலும், பொது வெளியில் ஒரு நடிகை இவ்வாறு பதிவிட்டிறுப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காண்டம் விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வாலை குறித்து நெட்டிசன்கள் கலவையாக பதிலளித்துள்ளனர். நீங்கள் இப்படி விளம்பரம் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை மேடம் என சிலரும், இது ஒரு துணிச்சலான விளம்பரம் என சிலர் பாராட்டியும் வருகின்றனர். மேலும் சிலர் கோச்சையாக பேசியும் பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, மோர்ப்பியஸ் என்னும் பிராண்டி விளம்பரங்களை பகிர்ந்ததற்கு நிதி அகர்வால் பெரும் சர்ச்சைகளை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வாலை காதலிப்பதாகவும், இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த ஜோடி விரைவில் திருமண ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற செய்திகள் அடிக்கடி இணையதளங்களில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தான் நிதி அகர்வால் இது போன்ற விளம்பரத்தில் நடித்திருப்பது சிம்பு ரசிகர்களை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.

Views: - 1943

13

8