“நான் எல்லாமே பார்ப்பேன்”விஜய் கூறியதைக் கேட்டு ஷாக்கான பிரபல நடிகை..!

Author: Rajesh
6 May 2022, 1:54 pm
Quick Share

நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே, பீஸ்ட் மற்றும் டான் பட ஷூட்டிங் அருகருகே நடந்தது. அப்போது இரண்டு படக்குழுவினர்களும் சந்தித்து கொண்டனர். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

அந்த சமயத்தில் நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து நடிகை பிரியங்கா மோகன் கூறியிருக்கிறார். விஜய் சார் டாக்டர் படத்தில் எனது நடிப்பை பாராட்டினார். அதுமட்டுமின்றி தெலுங்கில் ஒரு பாடலை விஜய் பார்த்து பாராட்டினார்.
அப்போது நான் அவரிடம், சார் நீங்கள் அதெல்லாம் பாப்பிங்களா என கேட்டதற்கு நான் எல்லாமே பார்ப்பேன் என விஜய் சொன்னதாக பிரியங்கா ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

நடிகை பிரியங்கா மோகன், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து டாக்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுமாகியிருந்தார்.
அதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் டான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார், அப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

Views: - 551

0

0