துப்பாக்கி, தோட்டாக்களுடன் வந்த பிரபல தொழிலதிபர் : கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2021, 10:45 am
Cbe Airport-Updatenews360
Quick Share

கோவை : கோவை விமான நிலையத்தில் வைத்து திருப்பூர் தொழிலதிபரிடம் இருந்து 92 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற இண்டிகோ விமானத்திற்காக காத்திருந்த பயணிகளின் உடைமைகள் நேற்று இரவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, சசிகுமார் என்பவர் வைத்திருந்த கைப்பையில் ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கியும், 92 துப்பாக்கி தோட்டக்களும் இருந்தது மத்திய பாதுகாப்பு படையினரின் சோதனையில் தெரியவந்தது.

அதனை விமானத்தில் எடுத்து செல்வதற்கான உரிய அனுமதி இல்லை என்பதால், பீளமேடு காவல் நிலையத்தில் துப்பாக்கியும், தோட்டாக்களும் ஒப்படைக்கப்பட்டது.

பீளமேடு காவல்துறையினர் விசாரித்ததில், சசிகுமார் திருப்பூரில் பனியன் தொழில் செய்து வருவதும், துப்பாக்கிக்கு அனுமதி பெற்று 3 ஆண்டுகளாக வைத்துள்ள நிலையில் அலட்சியமாக தோட்டாக்களை உடன் எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்களின் அளவு 25 மில்லி மீட்டர் கொண்டதாகும். தொடர்ந்து, பீளமேடு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Views: - 190

0

0