சொத்து தகராறில் பிரபல கஞ்சா வியாபாரி கொலை : சிறையில் இருந்து வெளியே வந்த உறவினர் வெறிச்செயல்!!

17 April 2021, 1:27 pm
Dgl Murder -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : சின்னாளபட்டி அருகே கஞ்சா வியாபாரி கழுத்தை அறுத்து படுகொலை உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசி எறிந்த பரிதாபம் குற்றவாளியை 3-தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வேலாம்பட்டி பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இவர் மீது கஞ்சா விற்பனை தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவரது உறவினரான சின்னாளபட்டி வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், உறவினர் ராஜபாண்டி வசித்து வந்த வீட்டை அபகரித்ததாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ராஜா, குடிபோதையில் ராஜபாண்டி வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை ராஜாவும் அவரது மகன் சரத்குமார் இருவரும் ராஜபாண்டியை இருசக்கர வாகனத்தில் வைத்து மேலக்கோட்டை அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள அரண்மனை கிணறு என்ற கிணற்றின் அருகே ரத்தக் கரை கிடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகமடைந்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததில் ராஜபாண்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் ஆத்தூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் தேடியதில் ராஜபாண்டியின் உடல் கல்லில் கட்டப்பட்டு பாழடைந்த கிணற்றுக்குள் கிடந்தது.

தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு வெளியில் தூக்கி வந்தனர். பின்னர் இறந்தவரைப் அடையாளம் செய்ததில் இறந்தவர் ராஜபாண்டி என்பது தெரியவந்தது. மேலும் ராஜபாண்டியை கொலை செய்த அவரது உறவினரான ராஜாவும், மகன் சரத்குமாரும் தலைமறைவாக உள்ளனர்.

இருவரையும் 3 தனிப்படை அமைத்து சின்னாளபட்டி போலீசார் தேடி வருகின்றனர். கொலை செய்த ராஜா மீது சின்னாளபட்டி, அம்பாத்துரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையாகி ராஜா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இறந்த ராஜபாண்டியின் மனைவி பவித்ரா கொடுத்த புகாரினை அடுத்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த ராஜாவையும், அவரது மகன் சரத்குமாரையும் தேடி வருகின்றனர்.

Views: - 31

0

0