பிரபல கர்நாடக சங்கீத வித்வான் பி.எஸ் நாராயணசாமி காலமானார்!!

17 October 2020, 11:03 am
PS NArayanasamy - Updatenews360
Quick Share

சென்னை : பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல கர்நாடக சங்கீத வித்வான் பிஎஸ் நாராயணசாமி காலமனார் . அவருக்கு வயது 87.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர் பிஎஸ் நாராயணசாமி. இவர் செம்மங்குடி சீனிவாச அய்யர் உள்ளிட்ட மிகப்பெரிய இசை மேதைகளிடம் கர்நாடக இசையை பயின்றார்.

பல்லாயிரம் இசை மாணவர்களை உருவாக்கிய ஆசானாக விளங்கிய பிஎஸ் நாராயணசாமி பத்மபூஷன், சங்கீத கலா ஆச்சார்யா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

செம்மங்கடி சீனிவாச ஐயரின் பாணி அவரது பாடல்களில் தெளிவாக காணப்பட்டாலும், அவர் தனக்கென தனி பாணியை உருவாக்கி பாடியவர். அவரது பாடலில் ராக தெளிவு , ஸ்ருதி மற்றும் ஸ்வரஸ்தானாவின் தூய்மை இடம்பெற்றிருக்கும்.

பி.எஸ்.என் சர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட பி.எஸ் நாராயணசாமி, தனது 1999ஆம் ஆண்டில் சகீத கால ஆச்சார்ய விருது மியூசிக் அகாடமி சார்பாக பட்டம் வழங்கப்பட்டது.

கடந்த நில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று சென்னை மயிலாபூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவு காலமானார். அவருக்கு மனைவி வசந்தா மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். அவருடைய மறைவு செய்தி அறிந்த இசையுலகினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 32

0

0