வடிவேலுவுடன் நகைச்சுவையில் கலக்கிய நடிகர் காளிதாஸ் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
13 August 2021, 1:37 pm
Quick Share

சென்னை: வடிவேலுவுடன் நகைச்சுவையில் கலக்கிய பிரபல நடிகர் காளிதாஸ் காலமானார்.

கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். பாடகர் எஸ்பிபி, இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா, நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, கில்லி மாறன் உள்ளிட்ட பலரும் இதே காலக்கட்டத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நடிகரும் டப்பிங் கலைஞருமான காளிதாஸ், வடிவேலுவுடன் இணைந்து ஜனனம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 1980களில் வெளிவந்த பல படங்களின் வில்லன் நடிகர்களுக்கு டப்பிங் பேசியுள்ள காளிதாஸ், இதுவரை 3000 படங்களுக்கும் மேலாக டப்பிங் பேசியுள்ளார். சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் படத்திலும் டப்பிங் பேசியிருந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காளிதாஸ், அதற்காக சிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காளிதாஸ் காலமானார். அவருக்கு வயது 65. காளிதாஸின் மனைவி வசந்தா ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில், அவருக்கு விஜய் என்ற மகனும் பார்கவி என்ற மகளும் உள்ளனர். காளிதாஸின் இறுதிச்சடங்கு சென்னை போரூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

Views: - 685

1

1