பிரபல ஜவுளி கடையில் வணிக வரித்துறையினர் திடீர் சோதனை : வரி ஏய்ப்பு நடந்ததா..? என ஆய்வு

Author: Babu
15 September 2021, 11:11 am
sri kumaran thanga malaigai - updatenews360
Quick Share

கரூர் : கரூரில் பிரபல ஜவுளி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

முறையாக வரி செலுத்தாமல், போலி கணக்குகளை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்ததாக, தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 103 இடங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். அதே போன்று கரூர் கோவை ரோடு பகுதியில் உள்ள பிரபல சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை இடங்களில் ஈரோட்டைச் சார்ந்த வணிக வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தொடங்கிய வணிக வரித்துறையினரின் சோதனை 2வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

Views: - 103

0

0

Leave a Reply