ராணிப்பேட்டையில் பிரபல சாமியார் கைது : பண மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை..

8 November 2020, 4:26 pm
Priest Arrest - Updatenews360
Quick Share

ராணிப்பேட்டை : தொழிலதிபரிடம் பணம் மோசடியில் ஈடுபட்டதாக பிரபல சாமியார் சாந்தா சுவாமிகளை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் என்கின்ற சாந்தா சுவாமிகள் என்பவர் திருவலம் பகுதியில் மிகவும் பிரபலமான சாமியாராக வலம் வருபவர்.

இவர் அதிகளவில் ஆன்மீக பக்தியால் தன்னைத் தேடி வருபவர்களிடம் நம்பக தன்மை ஆக ஆசை வார்த்தை கூறி பல்வேறு நபர்களிடம் இருந்துபணத்தை இரட்டிப்பாக்க தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி ஈடுபட்டதாக பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்தநிலையில் வாலாஜாபேட்டை போதிகை நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கேசவன் 2010இல் இருந்து 2014 வரை சிறிது சிறிதாக 45 லட்ச ரூபாய் சாமியாரிடம் வழங்கியுள்ளார். இதனை திருப்பிக் கேட்டால் சாந்தாசாமியாடிகள் சூனியம் வைத்து விடுவதாக கூறி மிரட்டி பணத்தை தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவமூர்த்தி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் வாலாஜா காவல் நிலையத்தில் சாந்தா சாமியாடிகள் மீது பெங்களூர் பகுதியை சேர்ந்த கமலாகர ரெட்டி என்கின்ற நபர்கள் மீது புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் வாலாஜாபேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சாந்தகுமார் என்கின்ற சாந்தா சாமி அடிகள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் சாந்த சாமி அடிகளுக்கு உதவியாக இருந்த பெங்களூர் பகுதியை சேர்ந்த கமலகர ரெடி என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மாவட்டத்தில் மிகப்பிரபலமான சாமியார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 28

0

0