அதிமுக எம்எல்ஏ வீட்டில் நுழைந்த பிரபல கொள்ளையன் : 8 மாதத்திற்கு பிறகு சிக்கினான்!!

Author: Udayachandran
8 October 2020, 12:45 pm
Quick Share

மதுரை : அதிமுக எம்எல்ஏ வீட்டில் திருட முயன்ற பிரபல கொள்ளையனை 8 மாதத்திற்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுகவின் எம்எல்ஏ மாணிக்கத்திற்கு சொந்தமான வீடு மதுரை பாண்டி கோவில் குறிஞ்சி நகர் பகுதியில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு அவர் வீட்டில் திருட முயன்ற கொள்ளையன் வீட்டில் ஆட்களின் நடமாட்டம் இருப்பதை பார்த்து தப்பியோடி உள்ளார்,

இந்தநிலையில் கொள்ளை முயற்சி தொடர்பாக வழக்கு பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் எம்எல்ஏ வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்டது மதுரை சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த கொள்ளையனை தேடி வந்த நிலையில் நேற்று இரவு பாண்டி கோவில் அருகே பதுங்கி இருந்த கொள்ளையானை மதுரை மாநகர அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் அவர் மதுரை வளர் நகர், அண்ணாநகர் பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 44 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்ற ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 54

0

0