சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கைது : புளியந்தோப்பு அருகே பிடித்த போலீசார்!!

7 November 2020, 8:26 pm
Chennai Rowdy Arrest - Updatenews360
Quick Share

சென்னை : கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ள பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் புளியந்தோப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (எ) ஆற்காடு சுரேஷ் (வயது 43). இவர் மீது  பூந்தமல்லி நீதிமன்றத்தில் வெளியே சின்னா (எ) சின்ன கேசவலு என்ற ரவுடியை வெட்டிக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 6 கொலை வழக்கு மற்றும் 20 க்கும் மேற்பட்ட அடிதடி ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சில வழக்குகளில் இவர்  தேடப்பட்டு வந்தார். இவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் புளியந்தோப்பு கலைஞர் பூங்கா பகுதிக்கு ஆற்காடு சுரேஷ் வந்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கலைஞர் பூங்கா பகுதிக்கு சென்ற புளியந்தோப்பு போலீசார் ஆற்காடு சுரேஷை கைது செய்தனர். ஏற்கனவே இவர் சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். இதனையடுத்து இவரை புளியந்தோப்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 150

0

0