பிரபல ரவுடி தலை துண்டித்து கொலை : கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் மறைமுக எச்சரிக்கை.. பீதியில் திருச்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 1:52 pm
Murder Warning -Updatenews360
Quick Share

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த சின்ராஜ் என்பவர் பொன்மலைப்பட்டி கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி கொலை செய்தனர்.

அத்துடன் விட்டு செல்லாத அந்த கும்பல், சின்ராஜின் தரையை துண்டித்து படுகொலை செய்தனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த பொன்மலை போலீசார் உடலை கைப்பற்றி சிசிடிவி கேமரா உதவியுடன் கும்பலுக்கு வலை வீசி தேடி வருகின்றனர்.

விசாரணையில் 4 நாட்களுக்கு முன் ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் கீழே உள்ள கழிவறையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற நிஷாந்த் என்பவரை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டி கொன்று தப்பியது.

இந்த நிலையில் அந்த கொலைக்கு கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்ததால் நிஷாந்த்தின் நண்பர்கள் விஜய் என்பவரை வெட்டி படுகொலை செய்துள்ளது. பதிலுக்கு விஜயனி தம்பி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நிஷாந்த் என்பவரை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் அதே தொடர்ச்சியாகத்தான் சின்ராஜ் என்பவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து சின்ராஜ் மறைவையொட்டி அப்பகுதி முழுவமும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்த ஒட்டியிருந்தனர். அதில் மரணமடைந்த சின்ராஜ் ஊர்வலம் மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என எழுதியிருந்தனர்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

ஆனால் இறுதியில் விரைவில் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. இந்த வார்த்தையால் மீண்டும் பழிக்கு பழிக்கு கொலை நடக்க வாய்ப்புள்ளது என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உறைந்துள்ளனர்.

Views: - 519

0

0