தஞ்சை குடவாசல் அருகே நீதிமன்றத்திற்கு வந்து சென்ற ரவுடியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் ஓணான் செந்தில். இவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் வசித்து வருகிறார். ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓணான் செந்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக திருவாரூர் நீதிமன்றத்திற்கு கும்பகோணம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அகிலன் மற்றும் மயிலாடுதுறை பாலையூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாரதிராஜா ஆகியோருடன் காரில் வந்து விட்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட நாகலூர் என்கிற இடத்தில் இவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு சொகுசு கார், இவர்களது காரின் பக்கவாட்டில் உரசி உள்ளது. இதில் ஓணான் செந்தில் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்கள் முட்டில் ஏறி நின்று உள்ளது.
அதைத் தொடர்ந்து, காரில் இருந்து ஓணான் செந்தில் இறங்கியவுடன் பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய ஐந்து நபர்கள், ஓணான் செந்திலை சரமாரியாக தலை கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளனர். இதில் தலை முழுவதுமாக சிதைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ஓணான் செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், அந்த கும்பல் வழக்கறிஞர் அகிலனையும் கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் காவல் துறையினர், அகிலனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஓணான் செந்தில் உடலை காவல்துறையினர் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ நிகழ்விடத்திற்கு வந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இரண்டு தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
குறிப்பாக ஓணான் செந்தில் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாகவோ அல்லது பழி வாங்கும் நடவடிக்கையாகவோ, யாரேனும் அவரை கொலை செய்துள்ளனரா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யும் போதுதான் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் எத்தனை பேர்…? எதன் காரணமாக இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.