‘கோடான கோடி மக்களின் பிராத்தனைக்கு பலன்’ : பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம்..!

15 August 2020, 4:37 pm
spb - updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கு பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரையில் அனைத்து தரப்பு மக்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவிற்கு அகப்பட்டு வரும் திரையுலக நட்சத்திரங்களின் வரிசையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் இணைந்தார்.

இவர் கடந்த 5ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் எஸ்.பி.பி.க்கு திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக, தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்களும், பிரபலங்களும், எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐ.சி.யூ.வில் செயற்கை சுவாசத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் இந்த தகவலைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 35

0

0