விபத்தில் பலியான ரசிகர்களுக்கு இதுவரை விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்.
விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் அவரது கட்சியினரும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்சியினர் பேருந்து, வேன் கார்களின் சென்றனர்.
மாநாடு முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் உறையூர் பகுதியை சேர்ந்த இளைஞர் அணி துணைச் செயலாளர் கலை ஆகியோர் விழுப்புரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் பலியாகினர்.
அவர்கள் இருவரது உடலும் திருச்சி கொண்டுவரப்பட்டது. அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்லி.ஆனந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே இறுதி மரியாதை செலுத்த வந்த விஜய் ரசிகர்கள் இதுவரை நடிகர் விஜய் எந்தவித வருத்தம் தெரிவித்தும் அறிக்கை கொடுக்கவில்லை மரியாதை செலுத்த அவர் வரமாட்டாரா எனவும் ஆவேசமாக கட்சியினர் பேச ஆரம்பித்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என விஜய் கூறியதால்தான் நான் இங்கு வந்தேன் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தை கட்சி பார்த்துக் கொள்ளும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.