தேர்தலில் போட்டியிடுகிறாரா ரஜினி? ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு!!

9 September 2020, 7:24 pm
Rajini Poster - updatenews360
Quick Share

கோவை : கட்சி வேறு ஆட்சி வேறு ஆட்சி மாற்றம் இப்போ இல்லைனா எப்போதும் இல்லை என கோவை மாவட்ட ரஜினி ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பலமுறை கூறப்பட்டாலும் இதுவரை அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை, தற்போது அவர் அரசியலுக்கு வர தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்ட ரஜினி ரசிகர்கள் கோவை மாநகரில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கட்சி வேறு, ஆட்சி வேறு, அரசியல் மாற்றம் இப்போ இல்லனா எப்போதும் இல்லை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இளைஞர்களுக்கு அரசியலில் முன்னுரிமை , ஊழல் இல்லா அரசியல், தேவையற்ற கட்சி பதவிகள் நீக்கம், பதவி ஆசை உள்ளவர்கள் வேண்டாம், கட்சி ஆட்சி வேறு, அரசியல் மாற்றத்தை தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே கொடுக்க முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதன் மூலம் அவர் கட்சி அறிவிப்பு விரைவில் அறிவிப்பார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எது உண்மை என்று தேர்தலுக்குள் ரஜினி மௌனம் கலைத்துவிடுவார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 0

0

0