நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்…விழுப்புரத்தில் பரபரப்பு..!!

Author: Rajesh
26 February 2022, 9:55 am
Quick Share

விழுப்புரம்: நிலத்தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே அண்ராய நல்லூர்‌ கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது நிலம் புதுப்பாளையம்‌ கிராமத்தில் உள்ளது. இவரது நிலத்துக்கு அருகில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் நிலம் உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், சின்னராஜ் தனது நிலத்தில் இருந்த சவுக்கு கன்றுகளை பிடுங்கி எறிந்தது குறித்து முருகனிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் சின்னராஜை தடியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சின்னராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் சின்னராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சின்னராஜ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் முருகனை உடனே கைது செய்யக்கோரியும் சின்னராஜ் உறவினர்கள் திரு வெண்ணெய்நல்லூர்- திருக் கோவிலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 308

0

0