ராமநாதபுரத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் பிரேக் ஷூ கழன்று விழுந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு. 61 வயதான இவர், இன்று காலை 7.35 மணியளவில் தனது கிராமத்தில் விவசாயப் பணிக்காக ரயில் தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்து உள்ளார்.
அப்போது அந்த வழியே ராமநாதபுரம் – மதுரை செல்லும் பயணிகள் ரயில் வேகமாக சென்று உள்ளது. அப்போது அதில் இருந்து, இரும்பு பிரேக் ஷூ ஒன்று கழன்று சண்முகவேலின் முகத்தில் பலமாக அடித்து உள்ளது.
இதில் பலத்த காயமடைந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் ரயில்வே போலீசார், உயிரிழந்த சண்முகவேல் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: லாரிக்கு அடியில் புகுந்த கார் : கண்ணிமைக்கும் நேரத்தில் கோரம் : நொடியில் பலியான 6 பேர்!
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், இந்தச் சம்பவத்தால் ரயிலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், ரயில் நிற்காமல் சென்றுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.