யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் : வனத்துறையை கண்டித்து மக்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு!!

31 January 2021, 8:35 pm
Public Protest - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகே உள்ள லிங்கா புரம் பகுதியில் 5ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைப்பெற்று வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய இந்த இந்த பகுதியில் உள்ள காந்தையாற்றில் தண்ணீர் வரத்துத்து காரணமாக காந்தவயல் மற்றும் லிங்காபுரம் இடையிலான உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதி மக்கள் வனச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை இந்த சாலை வழியே தனது விவசாய தோட்டத்திற்கு சென்று வந்த விவசாயி சம்பத்குமார்
காட்டுயானை தாக்கி உயிரிழந்தார்.

புதர் மண்டி கிடக்கும் வனச்சாலையை சீரமைக்க ஏற்கனவே லிங்கா புரம் மக்கள் பல முறை கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த சம்பவம் கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து விவசாயி உயிரிழப்பிற்கு காரணமான சிறுமுகை வனத்துறையை கண்டித்து லிங்கா புரம் மக்கள் சிறுமுகை நால்ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய பாதுகாப்பு அளிக்க தவறியதாக வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் மேட்டுப்பாளையம் சத்தி சாலையில் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லிங்காபுரம் பகுதியில் அடிக்கடி வன விலங்கான காட்டுயானை ஊருக்குள் புகுந்தால் பொதுமக்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை என பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டாச்சியர் மற்றும் காவல்துறை துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்நபட்டு பிரச்சனைக்குரிய வனச்சாலையை சீரமைப்பது டன் புதர்களை அப்புறப்படுத்தி அகழிகளை ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வனத்துறையினர் போலீசார் சமரசம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக மேட்டுப்பாளையம் சத்தி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Views: - 0

0

0