பயிர் கடன் தள்ளுபடி : முதலமைச்சருக்கு நன்றி கூறி அதிமுகவினர், விவசாயிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!!
5 February 2021, 5:36 pmஈரோடு : கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி என தமிழக முதல்வர் அறிவித்ததை கொண்டாடும் வகையில் சத்தியமங்கலத்தில் அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள ரூபாய் 12.110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனை வரவேற்கும் விதமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர அதிமுக சார்பில் அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் இணைந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.பி.எஸ் கார்னரில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி விவசாயிகளின் வாழ்வாதாரம் காத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகர செயலாளர் கிருஷ்ணராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் வி.சி. வரதராஜ் வடக்கு ஒன்றிய செயலாளர் மாரப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0
0