தடுப்பணை கட்டித்தர வேலூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை….!!

26 November 2020, 8:01 pm
velur 3 - updatenews360
Quick Share

வேலூர்: தடுப்பணை இல்லாத காரணத்தினால் பல லட்சம் கனஅடி தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

‘பாலாறு’ – ஒரு காலத்தில் இந்த ஆற்றில் பால் போன்று வெள்ளம் சென்றதால் இந்த ஆறு பாலாறு என்று பெயர் பெற்றது. ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே சுமார் 50க்கும் மேற்பட்ட தடுப்பனைகளை அவர்கள் எல்லையில் கட்டி தண்ணிர் வரத்தை அடியோடு நிருத்தி பாலாற்றின் பெயரை தண்ணிர் இல்லா ஆறு என்று மாற்றியமைத்தனர்.

ஒருமுறை பாலாற்றில் வெள்ளம் சென்றாலே சுமார் 7 வருடங்களுக்கு குடிநீர் பிரச்சனை வேலூர் மாவட்டத்திற்க்கு இல்லை என்று பெரியோர்கள் கூறுவார்கள். என்னதான் ஆந்திர அரசு தடுப்பனைகள் கட்டினாலும் இறை அருளால் மழைகாலங்களில் ஜவ்வாது மலை பகுதியில் பெய்யும் மழை ஒன்றுதிரண்டு பாலாற்றின் கிளை ஆறுகளான வானியாம்பாடி ஆறு, மாதனூர் ஆறு, அகரம் ஆறு மற்றும் நாகநதி ஆற்றின் வழியாக பாலாற்றில் கலந்துவிடும். இந்த நீர் தடுப்பனை இல்லாத காரணத்தினால் வீணாக கடலில் கலந்துவிடும்.

பொதுவாக மாநிலம் முழுவதும் புயல் வரக்கூடாது என்று வேண்டினால் வேலூர் வாசிகள் மட்டும் புயலை தாம்புலம் வைத்து வரவேற்பார்கள். காரணம் புயலால் வரும் மழைகூட இல்லையென்றால் குடிக்க சிறிதுகூட குடிநீர் கிடைக்காது என்பதால்தான். இந்நிலையில் தற்போது நிவர் புயலால் இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் ஜவ்வாது மலையிலிருந்து மழைநீர் காட்டாறு வெள்ளம்போல் பாலாற்றின் கிளை நதிகளில் பெருக்கெடுத்து வந்தவன்னம் உள்ளது.

இந்த நீரானது பாலாற்றில் கலக்கும் பொழுது பாலாற்றில் பெயருக்கு ஏற்ப பால்போல் வெள்ளம் போவது உறுதி. ஆனால் தடுப்பனை இல்லாத காரணத்தால் பல லட்சம் கனஅடி நீர் கடலில் கலந்து வீணாகி போய்விடுமே என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தடுப்பனை மட்டும் ஒன்று ,கட்டப்பட்டு இருந்தால் ஒருங்கினைந்த வேலூர் மாவட்டத்தில் மூன்றுபோகம் விவசாயம் செய்து வேலுரையே தஞ்சாவூர் போல் நெற்களஞ்சியமாக மாற்றி தர முடியும் என்று விவசாயிகள் சூளுரைக்கின்றனர்.

Views: - 14

0

0