ஆண்டிப்பட்டியில் பூமார்க்கெட் மூடப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி : சாலையில் பூக்களை கொட்டி போராட்டம்!!

8 May 2021, 6:50 pm
Farmers Protest - Updatenews360
Quick Share

தேனி : ஆண்டிப்பட்டியில் பூ மார்க்கெட் திறக்காததால் விற்பனை செய்ய முடியாத விவசாயிகள் பூக்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பூ விவசாயம் அதிகளவு நடைபெறுகிறது. இங்கு விளையும் பூக்களை ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

ஆனால் கொரோனா நடவடிக்கையாக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் மார்க்கெட்டில் உள்ள கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விவசாயிகள் வயல்களில் இருந்து வழக்கம் போல் பூக்களை பறித்து விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆனால் கடைகள் திறக்காததால் விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து மதுரை – தேனி சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த பூக்களை சாலையில் கொட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பூக்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கூறினர். மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கடைகள் திறக்க அனுமதியில்லை என்றும் விற்பனைக்கு வேறு இடம் தேர்வு செய்து தரப்படும் என போலீசார் கூறினர்.

இதையடுத்து பூக்களை மொத்த வியாபாரிகளிடம் சாலையிலேயே விற்பனை செய்து விட்டு சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 186

0

0