ஆடிப்பட்டம் தேடி விதை… நிலக்கடலை விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்.. விதை விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை

17 July 2021, 6:25 pm
ground nut - updatenews360
Quick Share

தமிழ் மாதமான ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப ஆங்காங்கே விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள், கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நிலக்கடலை விவசாய பணிகளை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் போய்கைபுதூர் பகுதியில் இன்று ஆடி மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அப்பகுதியில் பல ஏக்கரில் நிலக்கடலை விதைப் பருப்பு பயிரிடப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் நிலக்கடலை விதை பருப்பின் விலை கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் உயர்ந்து, 100 முதல் 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலக்கடலை, தற்பொழுது ஒரு கிலோ 120 ரூபாய்க்கு வாங்கி விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

வாழை விவசாயம் மேற்கொண்ட விவசாயிகள் தற்போது நிலக்கடலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று 2-ம் அலை காரணமாக, ஊரடங்கு விதிகள் கடைபிடிக்கப்பட்ட நிலையில், வாழை விவசாயத்தில் இழப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் தற்பொழுது நிலக்கடலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் அகண்ட காவேரி என்று அழைக்கப்படும் காவேரி ஆற்று கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்வதன் காரணமாக, விவசாயிகள் நிலக்கடலை பயிரிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், விவசாயிகள் கடந்த ஆண்டை காட்டிலும் நிலக்கடலை விதை பருப்பின் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆகவே அரசு விவசாய பணிகளை மெற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 173

0

0