மஞ்சளுக்கான 5% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்க : முதலமைச்சர் ஸ்டாலினிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
27 January 2022, 3:23 pm

சென்னை : மஞ்சளுக்கான 5 விழுக்காடு ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய விவசாயிகள் சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வசிக்காமணி தலைமையில் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா ,கர்நாடக, மாநிலத்தை சேர்ந்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெய்வசிக்காமணி :- மஞ்சள் விவசாயம் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற விவசாயம், மஞ்சலுக்கான 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துளோம். முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு வேண்டியதை கேட்ட உடனே செய்து கொடுக்கும் திறன் மிக்க முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார். இது திமுக அரசு என்பதை விட விவசாயிகளின் அரசாக உள்ளது, என தெரிவித்தார்.

  • michael rayappan character was inspired from original character said by atlee ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ