விவசாயிகளை வாழ விடு : தமிழக அரசுக்கு எதிராக அன்னூரில் விவசாயிகள் நடைபயணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2022, 2:49 pm
annur farmers - Updatenews360
Quick Share

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ மூலம் தொழில் பூங்கா அமைக்க 3862 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிர்ப்பு

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஒன்றியங்களை சேர்ந்த பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.

இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து “நமது நிலம் நமதே” என்ற பெயரில் போராட்டக் குழு தொடங்கி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக விவசாய நிலங்களை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்களான 1630 ஏக்கர் மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும் என்றும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும், நிலத்தடி நீர், காற்று மாசுப்படுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், தொழில் பூங்கா அமைக்கும் அரசாணையை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றும், அன்னூர், மேட்டுப்பாளையம் வட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமெனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கோவை அன்னூர் செங்கப்பள்ளி முதல் வடக்கலூர் வரை தொழிற்பூங்காவிற்கான கையகப்படுத்தும் நிலம் அமைந்துள்ள ஊராட்சிகளில் நடைபயணம் மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

Views: - 390

0

0