எஸ்.பி.பியின் உடலை சுமக்க தயாராகி வரும் ‘பண்ணை நிலம்‘!!
25 September 2020, 2:35 pmQuick Share
திருவள்ளூர் : மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் உடலை அவருக்கு சொந்தமான விவசாய பண்ணை நிலத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்திற்கு சொந்தமான விவசாய பண்ணை 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் தென்னந்தோப்பு மாமரங்கள் நெற்பயிர் அங்கு பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது தென்னை மரத் தோப்பு உள்ள இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் மூன்று நபர்கள் இடத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் பணிகளை தற்போது தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.