வேகமாக நிரம்பும் வைகை அணை : 7 மதகுகளும் திறப்பால் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!!

Author: Udayachandran
27 July 2021, 5:42 pm
vaigai Dam -Updatenews360
Quick Share

தேனி : வைகை அணை நீர்மட்டம் இன்று 69 அடியாக உயர்ந்துள்ள நிலையில், கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை, மூல வைகையில் தொடர் நீர் வரத்து, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் ஆகியவற்றால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம், கடந்த ஜூலை 8-ம் தேதி 66 அடியாக உயர்ந்தது. இதனால், வைகை ஆற்றங்கரையோரவாசிகளுக்கு பொதுப் பணித் துறை சார்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர் நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு 68.50 அடியாக உயர்ந்தது.

இதையடுத்து, ஆற்றங்கரையோரவாசிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப் பணித்துறை சார்பில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது . தற்பொழுது அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டி உள்ளதால் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக வெளியேற்றபடும் வகையில் இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் அவர்கள் கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மணியை ஒலிக்க விட்டு 7 மதகுகளையும் தண்ணீர் திறந்து விட்டார். இந்நிலையில் அணைகளின் தற்பொழுது வைகை அணை நீர்மட்டம் 69.00அடியாக உள்ளது.

அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 1731கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 5, 542மில்லியன் கன அடியும், அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் முதல் போக நெல் சாகுபடிக்கும், மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கும் விநாடிக்கு 730 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

Views: - 164

0

0