தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13), மகள் ஆராத்யா (9) மற்றும் மனைவி மஞ்சு ஆகியோருடன் மல்காபூர் புறநகரில் உள்ள ஆதர்ஷ்நகர் காலனியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் சதாசிவபேட்டை மண்டலத்தில் உள்ள ஆத்மகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகிறார்.
இதையும் படியுங்க: தமிழக காவல்துறை குறித்து திருமா விமர்சனம்… அமைச்சர் திடீர் விளக்கம்!!
மனைவி மீது சந்தேகப்பட்டு சண்டையிட்டதால் தம்பதியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், மனைவி 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சுபாஷ், முதலில் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திங்கட்கிழமை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைகளின் தரையில் இறந்து கிடந்த நிலையில் சுபாஷ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இந்த சம்பவம் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். தடவியியல் குழு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தது. சுபாஷ் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது
இதில் அவரது மனைவி மஞ்சுளா மீது சந்தேகம் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். மனைவியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார். சம்பவ இடத்தை எஸ்.பி. பரிதோஷ் பங்கஜ் ஆய்வு செய்து விவரங்களை விசாரித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.