விருதுநகர்: தந்தை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்ய நினைத்த மாணவி கடிதம் தவறி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கிடைத்தால் உரிய நடவடிக்கை தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகஜோதி மணி ( 43). கண்ணாடி கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்புச்செல்வி (36). தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் விருதுநகரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். மூத்த மகள் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜெகஜோதிமணி வேலைக்கு சென்று விட்டு மதியம் உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். மூத்த மகள் கடந்த ஜனவரி மாதம் பள்ளி செல்லாமல் அன்று வீட்டில் இருந்த போது பாலியல் வன் கொடுமை செய்துள்ளார்.
கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து இதே போன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இரவில் மனைவியும் இளைய மகளும் உறங்கிய பின் ஜெகஜோதிமணி மூத்தமகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது பற்றி தாய், தங்கையிடம் கூறினால் இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் ஜெகஜோதிமணி மிரட்டிள்ளார்.
தந்தையின் தொல்லை தாங்கமுடியாமல் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். பள்ளிக்குச் சென்றபோது அந்த கடிதம் பள்ளி வளாகத்தில் தவறி விழுந்து, அக்கடிதம் தலைமை ஆசிரியையின் கைக்கு கிடைத்ததுள்ளது.
கடிதத்தைப் படித்து அதிர்ச்சியடைந்த பள்ளித் தலைமை ஆசிரியர் சிறுமியின் தாய் அன்புச்செல்வியை பள்ளிக்கு அழைத்துள்ளார். அவர் முன் சிறுமியிடம் விசாரித்தபோது அழுது கொண்டே தந்தை ஜெகஜோதி மணி செய்த பாலியல் வன்கொடுமை செய்ததை சிறுமி கூறி அழுதுள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் அன்புச்செல்வி புகார் அளித்தார். போலீஸார் போக்சோ வழக்குப் பதிந்து ஜெகஜோதிமணியை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.