மகளின் காதலை வெறுத்த தந்தை : நாடகமாடி காதலனை கொலை செய்த கொடூரம்!!!

1 March 2021, 4:35 pm
Daughter Boy Frd Murder -Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : மகளை காதலித்த வாலிபரை திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ஒசூர் பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தாண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமண செட்டியார் (வயது 55) என்பவர் பெங்களூருவில் வசித்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் அவரது கடைக்கு அருகில் உள்ள கடையை சேர்ந்த நவீன் (வயது 25) என்ற இளைஞர், லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் காதல் விவகாரம் லட்சுமணனுக்கு தெரிய வர, நவீனை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் காதலித்து வந்ததுள்ளனர். பலமுறை கண்டித்தும் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்ததாகவே சொல்லப்படுகிறது.

மகளை திருமணம் செய்து வைப்பதாக தாண்டரப்பள்ளி கிராமத்திற்கு நவீனை அழைத்து வந்த லட்சுமண செட்டியார், நவீண் தலை மீது கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்தில் பேரிகை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 11

0

0